/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு அரசு மருத்துவகல்லுாரியில் ஆர்ப்பாட்டம்
/
ஈரோடு அரசு மருத்துவகல்லுாரியில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 17, 2024 03:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை: கோல்கட்டாவில் அரசு மருத்துவமனையில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட முதுநிலை மருத்துவ மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டி, நாடு முழுவதும் நேற்று போராட்டம் நடந்தது.
இதன்படி பெருந்துறையில் உள்ள, ஈரோடு அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், மருத்துவர் மற்றும் பயிற்சி மருத்துவர், நேற்று கறுப்பு பட்டை அணிந்து, மாணவி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி கோஷமிட்டனர். இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். அரசு மருத்துவர் சங்கத்தலைவர் செந்தில்ராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

