ADDED : மே 12, 2024 07:29 AM
ஈரோடு : தமிழ்நாடு மோட்டார் வாகன சிறப்பு விதிகளின்படி, குழு அமைத்து, ஒவ்வொரு ஆண்டும் பள்ளி வாகனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
இதன்படி ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, மேற்கு, பெருந்துறை, பவானி, கோபி, சத்தி பகுதிகளை சார்ந்த தனியார் பள்ளி வாகனங்களில் ஆய்வு நடக்கிறது.
ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு மற்றும் பெருந்துறை பகுதி தனியார் பள்ளி வாகனங்களுக்கான ஆய்வு, ஈரோட்டில் தனியார் பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார். இதில், 99 பள்ளிகளை சேர்ந்த, 980 வாகனங்களில் ஆய்வு நடந்தது. சிறு குறைபாடுடைய வாகனங்களில், குறைகளை நிவர்த்தி செய்ய திருப்பி அனுப்பி வைத்தனர். ஒரு வாரத்துக்குள் சரி செய்து, மீண்டும் ஆய்வுக்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டது.
ஆய்வில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வெங்கடரமணி (ஈரோடு கிழக்கு), பதுவைநாதன் (ஈரோடு மேற்கு), சக்திவேல் (பெருந்துறை), பெருந்துறை டி.எஸ்.பி., கோகுல கிருஷ்ணன், ஈரோடு தாசில்தார் முத்துகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக கடந்த, 3ம் தேதி முதல் 8ம் தேதி வரை, 95 பள்ளிகளை சேர்ந்த, 751 வாகனங்களில், 556 வாகனங்களுக்கு கூட்டாய்வு நடந்தது.