/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனங்களில் முதல் போகத்துக்கான நெல் நடவு பணி தீவிரம்

ADDED : ஆக 15, 2024 02:27 AM
கோபி, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனங்களில், முதல் போக நெல் சாகுபடியாக, நடவுப்பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப்பணை மூலம் தடுத்து, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்கால் மூலம், 24 ஆயிரத்து, 504 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. இரு பாசனங்களுக்கும், கடந்த ஜூலை 12 முதல், வரும் நவ.,8ம் தேதி வரை, 120 நாட்களுக்கு, முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
அந்நீரை கொண்டு இரு பாசனங்களிலும், எல்.எல்.ஆர்., டி.பி.எஸ்.,-5 ஆகிய ரக விதை நெல்லை நாற்றாங்காலில் விவசாயிகள் விதைத்திருந்தனர். தற்போது அந்த விதை நெல் நாற்றாக முளைத்ததால், இரு பாசனங்களிலும் கடந்த சில நாட்களாக, நடவுப்பணி தீவிரமாக நடக்கிறது. குத்தகை அடிப்படையில், ஏக்கருக்கு 5,400 ரூபாயில் கூலியாட்கள் நடவுப்பணியில், தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தற்போது வரை இரு பாசனங்களிலும், 50 சதவீதம் நடவுப்பணிகள் முடிந்துள்ளதாக, விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.