/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கீழ்பவானி வாய்க்காலில் நீர் கசிவு சரி செய்யும் பணி தீவிரம்
/
கீழ்பவானி வாய்க்காலில் நீர் கசிவு சரி செய்யும் பணி தீவிரம்
கீழ்பவானி வாய்க்காலில் நீர் கசிவு சரி செய்யும் பணி தீவிரம்
கீழ்பவானி வாய்க்காலில் நீர் கசிவு சரி செய்யும் பணி தீவிரம்
ADDED : ஆக 22, 2024 01:27 AM
பெருந்துறை, ஆக. 22-
----கீழ்பவானி வாய்க்காலில் கடந்த, 15ம் தேதி விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், 19 மாலை 4:00 மணியளவில் நல்லாம்பட்டி கிராமம், சாராயக்கவுண்டர் காடு என்ற பகுதியில், கீழ்பவானி வாய்க்கால் அடியின் குறுக்கே மழை நீர் செல்ல அமைக்கப்பட்ட வடிகால் குழாயில் சிறிய அளவில் நீர் கசிவு ஏற்பட்டது. இதுகுறித்து, நீர்வளத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். நேற்று முன்தினம் அமைச்சர் முத்துசாமி, நீர் கசிவு ஏற்பட்ட பகுதியை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு தண்ணீர் கசிவு ஏற்படுவதை விரைந்து சரி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின் அவர் கூறுகையில், ''தண்ணீர் கசிவை தடுப்பதற்கான தற்காலிக நடவடிக்கை மேற்கொள்ள, ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. இந்த போகத்திற்கான நீரை திறந்து விடுவதில் எவ்வித தடையும் இன்றி பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.
நல்லாம்பட்டி கிராமம், ஒட்டங்காடு, சாராயக் கவுண்டர் காடு பகுதியில், கீழ்பவானி வாய்க்கால் அடியில் குறுக்கே, மேடான கிழக்கு பகுதியில் இருந்து, தாழ்வான மேற்கு பகுதிக்கு மழை நீர் செல்ல வடிகாலுக்காக சிமென்ட் குழாய் பதிக்கப்பட்டுள்ளது.
இந்த குழாயில் தான் நீர் கசிவு ஏற்பட்டது. மேலும், குழாய் மிகவும் பழையது என்பதால், எதிர்காலத்தில் இதுபோன்ற நீர் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே, சிமென்ட் குழாய் உள்ளே புதியதாக துருப்பிடிக்காத இரும்பு குழாய் செருகி, மழை நீர் வழக்கம்போல் கிழக்கு பகுதியில் இருந்து, மேற்கு பகுதிக்கு செல்லும் வகையில் குழாய் அமைக்கும் பணி போர்கால அடிப்படையில் நடந்து வருகிறது. இந்த பணி இரண்டு நாளில் முடிந்து விடும். அதன்பின், வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது.