/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொடி, வேட்டி-சேலை அனுப்பும் பணி தீவிரம்
/
கொடி, வேட்டி-சேலை அனுப்பும் பணி தீவிரம்
ADDED : ஏப் 01, 2024 04:05 AM
ஈரோடு: ஈரோடு மாநகரில் மணிக்கூண்டு, ஈஸ்வரன் கோவில் வீதி, ராமசாமி வீதியில் மொத்த ஜவுளி விற்பனை கடைகளில் இருந்து, தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு, அரசியல் கட்சி தலைவர்கள் உருவம், சின்னம் பதித்த வேட்டி, சேலை, துண்டுகள் அனுப்பும் பணி சூடு பிடித்துள்ளது.
இதுகுறித்து கடை உரிமையாளர் கூறியதாவது:
லோக்சபா தேர்தலுக்காக பிற மாவட்டங்களில் இருந்து, பல்வேறு அரசியல் கட்சியினர் கொடுத்த ஆர்டரின் படி அரசியல் கட்சி தலைவர்கள் உருவம், சின்னம் பதித்த வேட்டி, சேலை, துண்டுகள் அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளோம். குறிப்பாக கோவை, திருச்சி, சேலம், கரூர், மதுரை, திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி பகுதி அரசியல் கட்சியினர் ஆர்டர் கொடுத்துள்ளனர். அரசியல் கட்சி கரை பதித்த வேட்டி, சேலை, கொடிகள், துண்டுகளை ஆர்டர் தந்துள்ளனர். இதில் வேட்டி, 100 ரூபாய் முதல் ௨00 ரூபாய்; சேலை, 150 ரூபாய் முதல் 300 ரூபாய்; துண்டு, 15 ரூபாய் முதல் 30 ரூபாய்; கொடி எட்டு ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. வரும் நாட்களில் தயாரிப்பு மற்றும் விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

