/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாநகராட்சியில் காலி பணியிடம்விண்ணப்பிக்க அழைப்பு
/
மாநகராட்சியில் காலி பணியிடம்விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஜூன் 23, 2024 02:33 AM
ஈரோடு:ஈரோடு மாநகராட்சியில் பொது சுகாதார மேளாளர், புள்ளியியல் உதவியாளர், நகர சுகாதார செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, அழைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகர நல அலுவலர் பிரகாஷ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: மாநகராட்சியில் பொது சுகாதார மேளாளர், புள்ளியியல் உதவியாளர், நகர சுகாதார செவிலியர் மற்றும் மருத்துவமனை பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படை கொண்டது. மாதம், 25,000 ரூபாய் சம்பளம்.
பொது சுகாதார மேளாளர் பணியிடங்களுக்கு, இளங்கலை (விலங்கியல் அல்லது பூச்சியியல்) ஒரு பாடமாக உள்ள பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். புள்ளியியல் உதவியாளர் பணியிடத்துக்கு, இளநிலை புள்ளியியல் அல்லது கணிணியியல் பட்டம் அல்லது பட்ட மேற்படிப்பு முடித்து, 5 ஆண்டுகளுக்கு மேல் முன் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில், நகர்புற சுகாதார செவிலியர் பணியிடத்துக்கு, 14,000 ரூபாய் சம்பளம். ஏ.என்.எம்., படித்தவர்கள் மற்றும் தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலிங்கில் பதிவேற்றம் செய்யப்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மருத்துவமனை பணியாளர் பணியிடத்துக்கு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் தேர்ச்சி பெறாதவர்களும் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத ஊதியம், 8,500 ரூபாய். இப்பணியிடங்கள் எக்காரணம் கொண்டும் பணிவரன் முறை அல்லது நிரந்தரம் செய்யப்பட மாட்டாது.
கல்வி சான்று நகல் மற்றும் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்தை, ஜூலை, 5ம் தேதிக்குள் ஆணையாளர், ஈரோடு மாநகராட்சி அலுவலகம், மீனாட்சி சுந்தரனார் சாலை, ஈரோடு என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.