/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வரைவு வழிகாட்டு பதிவேடு தயாரிக்க கருத்து, ஆட்சேபனை தெரிவிக்க அழைப்பு

ADDED : ஜூன் 16, 2024 06:20 AM
ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில், வருவாய் கிராமங்கள் வாரியாக வரைவு வழிகாட்டி பதிவேடு தயாரிக்கப்பட்டு, முக்கிய அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளன.
சந்தை மதிப்பு வழிகாட்டி மதிப்பை சீரமைத்தல் தொடர்பாக, சொத்துகளுக்கான சந்தை மதிப்பு வழிகாட்டி தயாரிக்க மதிப்பீடு செய்தல், வெளியிடுதல், திருத்தி அமைத்தலுக்காக பொதுமக்களின் கருத்து, ஆட்சேபனைகள் கோரப்படுகிறது.ஈரோடு மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள் வாரியாக வரைவு வழிகாட்டி பதிவேடு தயாரிக்கப்பட்டு, மக்கள் பார்வைக்காக தாசில்தார் அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகங்கள் உட்பட முக்கிய அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளன.
இதன் விபரங்களை, www.tnreginet.gov.in என்ற இணைய தள முகவரியில் அறியலாம். இதன் மீது ஆட்சேபனை, கருத்துக்கள் இருந்தால், அடுத்த, 15 நாட்களுக்குள் கலெக்டரின் தலைமையிலான மதிப்பீட்டு துணை குழுவிடம் நேரில் அல்லது தபால் மூலம் வழங்கலாம்.
இவற்றை, 'மதிப்பீட்டு துணைக்குழு, கலெக்டர் அலுவலகம், ஈரோடு - 638011' என்ற முகவரியில் தெரிவிக்கலாம்.