/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வரி வசூலில் ரூ.18 ஆயிரம் முறைகேடு;பி.டி.ஓ.,விசாரணை
/
வரி வசூலில் ரூ.18 ஆயிரம் முறைகேடு;பி.டி.ஓ.,விசாரணை
வரி வசூலில் ரூ.18 ஆயிரம் முறைகேடு;பி.டி.ஓ.,விசாரணை
வரி வசூலில் ரூ.18 ஆயிரம் முறைகேடு;பி.டி.ஓ.,விசாரணை
ADDED : மே 07, 2024 02:38 AM
காங்கேயம்:காங்கேயம் யூனியன், பரஞ்சேர்வழி கிராமத்தில் வரி வசூலில், 18 ஆயிரம் ரூபாய் முறைகேடு செய்தது தொடர்பாக, விசாரணை நடந்து வருகிறது.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் யூனியன், பரஞ்சேர்வழி பஞ்சாயத்து தலைவராக தங்கராசு உள்ளார். லீமாரோசிலின், 50, ஊராட்சி செயலராக பணிபுரிகிறார். இவர் குடிநீர் கட்டணம், சொத்து வரி, தொழில் வரி, வீட்டு வரி உள்பட பல்வேறு பணிகளை கவனித்து வருகிறார். இதில் கடந்த மாதம் சிவியார்பாளையம் கந்தசாமி என்பவருக்கு வரி விதித்து, 18,744 ரூபாய் வசூல் செய்துள்ளார். இதில் அசல் ரசீதில் சீல் வைத்து, 18,744க்கு ரசீது தந்துள்ளார். ஆனால் கார்பன் வைக்காமல் எழுதிய நகல் காப்பியில், 77 ரூபாய் மட்டும் எழுதி வைத்துக் கொண்டனர். பின்பு இதை கணிணியில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
ரசீது பெற்று கொண்ட கந்தசாமி, தான் கொடுத்த பணத்திற்கு ரசீது இல்லாமல், 77 ரூபாய்க்கு மட்டும் கணினி ரசீது இருப்பது குறித்து, ஊராட்சி தலைவர் தங்கராஜ், துணைத் தலைவர் காயத்ரி ஆகியோரிடம் கேட்டுள்ளார். இகுறித்து, காங்கேயம் வட்டார வளர்ச்சி அலுவலர் விமலாதேவி விசாரித்து, முறைகேடு நடந்துள்ளது குறித்து, மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ளார். இதையடுத்து, பரஞ்சேர்வழி ஊராட்சியில் பல்வேறு கணக்குகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் விமலாதேவி கூறுகையில், ''முறைகேடு சம்பந்தமாக விசாரணை நடந்து வருகிறது,'' என்றார்.