/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காவிரி வெள்ளத்தால் குடிநீரேற்ற நிலையங்கள் பாதிப்பு
/
காவிரி வெள்ளத்தால் குடிநீரேற்ற நிலையங்கள் பாதிப்பு
காவிரி வெள்ளத்தால் குடிநீரேற்ற நிலையங்கள் பாதிப்பு
காவிரி வெள்ளத்தால் குடிநீரேற்ற நிலையங்கள் பாதிப்பு
ADDED : ஆக 01, 2024 02:04 AM
ஈரோடு: மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில், 1.25 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், ஈரோடு மாவட்-டத்துக்கான குடிநீரேற்று நிலையங்கள் மூழ்கி பணிகள் பாதித்துள்-ளன. மேட்டூர் அணையில் திறக்கப்படும் நீரால், ஈரோடு மாவட்டத்தில் பாயும் காவிரி ஆற்றில் பல்வேறு இடங்களில் கூட்டு குடிநீர் திட்-டங்கள் செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக, ஊராட்சிகோட்டை குடிநீர் திட்டம், பெருந்துறை கூட்டு குடிநீர் திட்டம், மொடக்கு-றிச்சி பகுதிக்கான குடிநீர் திட்டம் போன்றவை ஆற்றின் கரைக-ளிலும், உட்புறமும் அமைக்கப்பட்டுள்ளன.
மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட வெள்ள நீர் கடந்த, இரு நாட்களாக காவிரி ஆற்றில் வெள்ளமாக செல்கிறது. தற்போதைய நிலையில், 1.25 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் செல்கிறது. இதனால் ஈரோடு, காளிங்கராயன் வாய்க்கால் அருகே காவிரி ஆற்றில் அமைந்துள்ள பெருந்துறைக்கான கூட்டு குடிநீர் திட்ட பம்பிங் ஸ்டேஷனை வெள்ள நீர் சூழ்ந்து, நீரேற்றத்தை நிறுத்தி வைத்துள்ளனர்.
இதுபற்றி, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறு-கையில்,'காவிரியில் பாசனத்துக்கு மட்டும் தண்ணீர் திறக்கும்-போது, நீரேற்று நிலையம் உள்ள பகுதிக்கு தண்ணீர் வராது. அலு-வலகம், மின் மோட்டார்கள் போன்றவை பாதிக்காது. தற்போது, 1.25 லட்சம் கன அடி தண்ணீர் வருவதால், இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்வதால், பெருந்துறை கூட்டு குடிநீர் திட்ட நீரேற்று நிலையம் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. நேற்று மாலை முதலே, இங்கிருந்து நீரேற்ற இயலவில்லை. ஓரிரு நாளில் தண்ணீர் வடிந்தால் மட்டுமே, தண்ணீரை ஏற்றி வினியோகிக்க இயலும். அதிலும், ஒரு நாள் முழுவதும் அப்பகு-தியில் துாய்மைப்பணி செய்தால் மட்டுமே, உள்ளே செல்ல இயலும்.
இதேபோல, ஈரோட்டை ஒட்டிய பழைய காவிரி குடிநீர் திட்ட நீரேற்று நிலையமும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. ஊராட்சி-கோட்டை குடிநீர் திட்ட நீரேற்று நிலையம், தற்போதைய நிலையில் பாதிப்பில்லை. தண்ணீர் மேலும் அதிகரித்தால், நீரேற்று பணிகள் பாதிக்க வாய்ப்புள்ளது,' என்றனர்.