ADDED : ஆக 30, 2024 04:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: கடந்த ஏப்ரலில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய மாணவ, மாணவியர் மற்றும் தனி தேர்வர்களுக்கு நேற்று முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
ஈரோடு ப.செ.பார்க் தகைசால் பள்ளியில் தலைமை ஆசிரியை சுகந்தி வழங்கினார்.
பெரும்பாலான பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகள் அதே பள்ளியில் பிளஸ் 1 சேர்ந்துள்-ளனர். இதனால் மாணவர்கள் அசல் மதிப்பெண் சான்றிதழை உடனே பெற ஆர்வம் காட்டவில்லை. தனி தேர்வர்களுக்கு அவர்கள் தேர்வெழுதிய மையங்களில் சான்-றிதழ் வழங்கப்பட்டது.