/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆர்ப்பாட்டம்
/
ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆர்ப்பாட்டம்
ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆர்ப்பாட்டம்
ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 29, 2024 02:05 AM
ஈரோடு: தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின், கூட்டு நடவடிக்கை குழுவினர், ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன், தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சரவணன் ஆகியோர் தலைமை வகித்தனர். மணி வரவேற்றார். நிர்வாகிகள் வேலுசாமி, சண்முகம், மதியழகன், பொன்னுசாமி பேசினர்.
தொடக்க கல்வி துறையில் பணியாற்றும், 90 சதவீத ஆசிரியர்களை, குறிப்பாக பெண் ஆசிரியர்களின் பதவி உயர்வு மற்றும் முன்னுரிமை ஆகியவற்றை பாதிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள பள்ளி கல்வித்துறை அரசாணை எண்: 243ஐ ரத்து செய்ய வேண்டும்.
அறிவிக்கப்பட்டுள்ள பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணையை மாற்றி அமைத்து, ஒன்றிய அளவில் மட்டும் கலந்தாய்வு நடத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.