/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
டாக்டரின் செல்போனை திருடிய களவாணி கைது
/
டாக்டரின் செல்போனை திருடிய களவாணி கைது
ADDED : ஜூலை 10, 2024 02:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி;கோபி அரசு மருத்துவமனையில், பச்சிளங்குழந்தைகள் நலப்பிரிவில், கடந்த, 2ம் தேதி, டாக்டர் சண்முகப்பிரியன் பணியில் இருந்தார்.
நோயாளிகளை கவனித்து கொண்டிருந்த சமயத்தில், டேபிளில் வைத்திருந்த அவரின் செல்போன் திருட்டு போனது. அவருடைய புகாரின்படி விசாரித்த கோபி போலீசார், கோபியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், 30, என்பவரை நேற்றிரவு கைது செய்து, செல்போனை பறிமுதல் செய்தனர்.