/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காலாவதி ஆவின் உணவு பொருள் உணவு பாதுகாப்பு துறை 'கமுக்கம்'
/
காலாவதி ஆவின் உணவு பொருள் உணவு பாதுகாப்பு துறை 'கமுக்கம்'
காலாவதி ஆவின் உணவு பொருள் உணவு பாதுகாப்பு துறை 'கமுக்கம்'
காலாவதி ஆவின் உணவு பொருள் உணவு பாதுகாப்பு துறை 'கமுக்கம்'
ADDED : மே 28, 2024 10:13 PM
ஈரோடு:கோபி மற்றும் கொடிவேரியில், காலாவதி ஆவின் பொருட்களை, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு மாவட்டம் கோபி பஸ் ஸ்டாண்ட் மற்றும் கொடிவேரி பகுதியில், ஆவின் ஸ்டாலில் காலாவதி உணவு பொருட்கள் விற்கப்படுவதாக புகார் சென்றது. இதன் அடிப்படையில் ஆய்வு செய்த, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலக குழுவினர், 115 பெட்டிகளில் பிஸ்கெட் பாக்கெட்களை பறிமுதல் செய்தனர். 5 கிலோ மாம்பழம் பறிமுதல் செய்தாலே, தகவல் அனுப்பும் உணவு பாதுகாப்பு பிரிவினர், நாளிதழ்களுக்கு தகவல் தராமல் மறைத்து விட்டனர்.
இதுகுறித்து விவசாய அமைப்பினர் கூறியதாவது:
500 கிலோவுக்கு மேல் ஆவின் தயாரிப்பிலான, காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். சித்தோட்டில் உற்பத்தியாகி, வெளியூர்களுக்கு அனுப்பப்பட்ட ஆவின் பொருட்களை அனைத்து பகுதியிலும் சோதனையிட்டு, காலாவதி இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். தற்போதுதான் அரசு போக்குவரத்து - போலீஸ் துறை மோதல் முடிந்த நிலையில், இதுபற்றி வாய் திறந்தால், 'ஆவின் - உணவு பாதுகாப்பு துறை' மோதல் துவங்கிவிடும் என்பதால், அதிகாரிகள் வாய் திறக்க மறுக்கின்றனர்.
இவ்வாறு கூறினர்.