/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இன்று திண்டல் வேலாயுதசாமி கோவிலில் கால்கோள் விழா
/
இன்று திண்டல் வேலாயுதசாமி கோவிலில் கால்கோள் விழா
ADDED : ஆக 22, 2024 01:27 AM
ஈரோடு, ஆக. 22-
ஈரோடு, திண்டல் வேலாயுதசாமி கோவிலில் சிவன் சன்னதி, அம்மன் சன்னதி கட்டுவதற்கான கால்கோள் விழா இன்று (22ம் தேதி) நடைபெறுகிறது.
ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, திண்டல் வேலாயுதசாமி கோவிலில் முருகன் குமார வடிவம் தாங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் கந்தர்சஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோவிலில் புதியதாக சிவன் சன்னதி, அம்மன் சன்னதி மற்றும் பரிவார சன்னதிகள் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அதற்கான கால்கோள் விழா மற்றும் ராஜகோபுரத்திற்கு நிலைக்கால் வைக்கும் விழா இன்று காலை, 9:00 மணிக்கு நடைபெற உள்ளதாக, செயல் அலுவலர் சுகுமார் தெரிவித்தார்