/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மஞ்சள் சாகுபடியை துவங்க தண்ணீர் திறந்திடுங்கள் காளிங்கராயன் பாசன விவசாயிகள் வலியுறுத்தல்
/
மஞ்சள் சாகுபடியை துவங்க தண்ணீர் திறந்திடுங்கள் காளிங்கராயன் பாசன விவசாயிகள் வலியுறுத்தல்
மஞ்சள் சாகுபடியை துவங்க தண்ணீர் திறந்திடுங்கள் காளிங்கராயன் பாசன விவசாயிகள் வலியுறுத்தல்
மஞ்சள் சாகுபடியை துவங்க தண்ணீர் திறந்திடுங்கள் காளிங்கராயன் பாசன விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 04, 2024 07:40 AM
ஈரோடு: 'மஞ்சள் சாகுபடியை துவங்க, காளிங்கராயன் வாய்க்கால் பாசனத்-துக்கு உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும்' என, நீர்வளத்-துறை அதிகாரிகளிடம் விவசாயி
கள் வலியுறுத்தினர்.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர், காளிங்கராயன் அணைக்கட்டில் இருந்து, காளிங்கராயன் வாய்க்கால் மூலம், 15,500 ஏக்கர் நேரடி-யாகவும், 10,000 ஏக்கர் மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகி-றது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன், 16ல் திறக்கப்படும் தண்ணீர் ஏப்., 30ல் நிறுத்தப்படும். பாசன பகுதியில் மஞ்சள், கரும்பு, நிலக்கடலை, எள் போன்ற பயிர்கள் சாகுபடி செய்வர். நடப்-பாண்டில், பவானிசாகர் அணையில் போதுமான நீர் இருப்பு இல்-லாததால், ஜூன், 16ல் தண்ணீர் திறக்க இயலவில்லை.
இதற்கிடையில் கடந்த, 15 நாட்களாக கணிசமான அளவு தண்ணீர் வரத்து உள்ளதுடன், அணை நீர் மட்டம், 66.88 அடி-யாக உள்ளது. எனவே, மஞ்சள் சாகுபடியை துவங்க காளிங்க-ராயன் வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும் என, விவசா-யிகள் வலியுறுத்தினர். நேற்று நீர் வளத்துறை உதவி செயற்பொறி-யாளர் உதயகுமார் மற்றும் அதிகாரிகளை, காளிங்கராயன் பாசன சபை தலைவர் வேலாயுதம், செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கதிர்வேல், பெருமாள் உள்ளிட்ட விவசாயிகள் சந்தித்து தண்ணீர் திறக்க வலியுறுத்தினர்.
கூட்டத்துக்கு பின், வேலாயுதம் கூறியதாவது: பவானிசாகர் அணையில் தற்போது, 9.47 டி.எம்.சி., நீர் மட்டுமே உள்ளது. காளிங்கராயன் பாசனத்துக்கு மட்டும், 5.184 டி.எம்.சி., தண்ணீர் தேவைப்படும். இதற்கு முன், தடப்பள்ளி -அரக்கன்கோட்டை பாசனத்துக்கும் தண்ணீர் திறக்க வேண்டிய நிலை உள்ளது. அவர்-களுக்கு, 8.8 டி.எம்.சி., தண்ணீர் தேவைப்படும். தவிர குடிநீர் தேவையும் உள்ளது என்பதை அதிகாரிகள் விளக்கினர். மஞ்சள் சாகுபடிக்காக வயலை தயார் செய்து, விதை மஞ்சளை வாங்கி விவசாயிகள் வைத்துள்ளனர். இப்போது தண்ணீர் திறந்து, பாச-னப்பணியை துவக்கினால் தான், அறுவடை சரியான நேரத்தில் நடக்கும் என்பதை விளக்கினோம். தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கிணறு வைத்துள்ள பல விவசாயிகள், மஞ்சள் சாகுபடியை துவக்கிவிட்டனர்.
கடந்த, 13 ஆண்டுக்கு பின் தற்போதுதான் மஞ்சளுக்கு நல்ல விலை கிடைப்பதால், இந்தாண்டு மஞ்சள் சாகுபடி பரப்பு அதிக-ரிக்கும் என எதிர்பார்க்கிறோம். குடிநீர் தேவைக்கு, 4 டி.எம்.சி., நீரை இருப்பு வைத்துவிட்டு, எங்களுக்கு வழங்குங்கள். ஒரு-வேளை நீர் வரத்தும், மழையும் குறைந்தால், தண்ணீரை நிறுத்தி கொள்ளுங்கள் என, கோரிக்கை வைத்துள்ளோம். மாவட்ட நிர்-வாகத்திடம் பேசி, அரசிடம் பேசுவதாக அதிகாரிகள் தெரிவித்-துள்ளனர். இவ்வாறு கூறினார்.