/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாநகரில் இன்று கம்பம் ஊர்வலம் மதியம் 2:00 மணி முதல் போக்குவரத்தில் மாற்றம்
/
மாநகரில் இன்று கம்பம் ஊர்வலம் மதியம் 2:00 மணி முதல் போக்குவரத்தில் மாற்றம்
மாநகரில் இன்று கம்பம் ஊர்வலம் மதியம் 2:00 மணி முதல் போக்குவரத்தில் மாற்றம்
மாநகரில் இன்று கம்பம் ஊர்வலம் மதியம் 2:00 மணி முதல் போக்குவரத்தில் மாற்றம்
ADDED : ஏப் 06, 2024 02:02 AM
ஈரோடு:மாநகரில் இன்று கம்பம் ஊர்வலம் நடப்பதால், இன்று மதியம், 2:00 மணி முதல் இரவு, 9:00 மணி வரை மாநகர போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களின் கம்பம் ஊர்வலம் இன்று நடக்கிறது. இதனால் மதியம், 2:00 மணி முதல் இரவு, 9:00 மணிவரை மாநகர போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பெரிய மாரியம்மன் கோவிலில் இருந்து கம்பம் ஊர்வலகமாக புறப்பட்டு ப.செ.பார்க், மணிகூண்டு, ஈஸ்வரன் கோவில் வீதி, காமராஜர் வீதி, எம்.எஸ். சாலை, ஜி.ஹெச். ரவுண்டானா, மேட்டூர் சாலை, ஸ்வஸ்திக் ரவுண்டானா, சத்தி சாலை, எல்லை மாரியம்மன் கோவில், நேதாஜி சாலை, மணிகூண்டு, பெரியார் வீதி, மண்டபம் வீதி, கச்சேரி வீதி, ஆர்.கே.வி, சாலை, டவுன் போலீஸ் ஸ்டேஷன், அக்ரஹாரம் வீதி வழியே காரை வாய்க்காலில் சென்று விடப்படும்.
எனவே சேலம், திருச்செங்கோடு, நாமக்கல்லில் இருந்து வரும் பஸ்கள், காவிரி சாலை, கே.என்.கே சாலை, மூலப்பட்டறை வழியே வ.உ.சி. பூங்கா பின்புறம் வந்து பயணிகளை இறக்கி விட்டு திரும்ப காவிரி சாலை வழியாக செல்ல வேண்டும்.கோபி, சத்தி வாகனங்கள் லோட்டஸ் ஷோரூம் அருகே, பயணிகளை இறக்கி விட்டு, வீரபத்திர 2வது வீதி வழியே திரும்பி, வீரபத்ர முதல் வீதி வழியாக சத்தி சாலையை அடைய வேண்டும். பவானி, அந்தியூரில் இருந்து வரும் பஸ்கள், அசோசியேஷன் பெட்ரோல் பங்க் அருகே பயணிகளை இறக்கி விட்டு செல்ல வேண்டும்.
திருச்செங்கோடு, நாமக்கல், சேலத்தில் இருந்து ஈரோடு வழியாக கோவை செல்லும் கன ரக வாகனங்கள் காவிரி சாலை, திருநகர் காலனி, அசோசியேஷன் பெட்ரோல் பங்க், வீர பத்திர வீதி, வீரப்பன்சத்திரம், கனிராவுத்தர் குளம், சித்தோடு வழியே செல்ல வேண்டும்.
கோவை, திருப்பூரில் இருந்து பெருந்துறை வழியே வரும் வாகனங்கள், பெருந்துறை சாலை, ஜி.ஹெச். ரவுண்டானா வலதுபுறம் திரும்பி பயணிகளை இறக்கி விட்டு மீண்டும் பெருந்துறை சாலையில் செல்ல வேண்டும்.
தாராபுரம், காங்கேயம், கொடுமுடி, கரூர், திண்டுக்கல்லில் இருந்து வரும் வாகனங்கள், கம்பம் ஊர்வலம் செல்லும் பாதையை கணித்து திருப்பி விடப்படும். கோவையில் இருந்து ஈரோடு வழியே திருச்செங்கோடு, சேலம், நாமக்கல் செல்லும் கனரக வானகங்கள் பெருந்துறை சாலை, வீரப்பன்பாளையம் பிரிவு வழியாக வில்லரசம்பட்டி நால்ரோடு சென்று அங்கிருந்து கனிராவுத்தர் குளம், வீரப்பன்சத்திரம் 16ம் நம்பர் ரோடு, வழியே பள்ளிபாளையம் வழியாக செல்ல வேண்டும். அல்லது ரிங்ரோடு வழியே சொக்கராயன் பேட்டை வழியாக செல்ல வேண்டும். இலகு ரக வாகன டிரைவர்கள், கம்பம் வரும் வழிகளை தவிர்த்து மாற்று வழிகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு போலீசார் கூறினர்.

