/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காங்கேயம் இன மாடுகள் ரூ.6 லட்சத்துக்கு விற்பனை
/
காங்கேயம் இன மாடுகள் ரூ.6 லட்சத்துக்கு விற்பனை
ADDED : ஆக 05, 2024 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம், திருப்பூர் மாவட்டம் காங்கேயம், நத்தக்காடையூர் அருகே, பழையகோட்டை மாட்டுத்தாவணியில் காங்கேயம் இன மாடுகளுக்கான சந்தை நேற்று நடந்தது.
மாடுகள், காளைகள், கிடாரி மற்றும் காளை கன்றுகள் என, 36 கால்நடைகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். மாடுகள், 20 ஆயிரம் ரூபாய் முதல், 60 ஆயிரம் ரூபாய் வரை விற்றன. கிடாரி கன்று, 12 ஆயிரம் ரூபாய் முதல், 40 ஆயிரம் வரை விற்றது.
மொத்தம், 16 கால்நடைகள், 6 லட்சம் ரூபாய்க்கு விற்றதாக, சந்தை பொறுப்பாளர் தெரிவித்தார்.