ADDED : ஆக 04, 2024 01:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம், ஆடிப்பெருக்கையொட்டி தாராபுரம் அமராவதி ஆற்றங்கரையில், திரளான மக்கள் நேற்று கூடினர். மணலில் கன்னிமார் உருவங்களை செய்து, பொட்டு, பூ வைத்து, ஆரத்தி எடுத்து பூஜை செய்தனர். பின் அமராவதி நதியை வணங்கி, திருமணமான பெண்கள் புது தாலி அணிந்து கொண்டனர்.
தாராபுரம் நாடார் தெருவில் இருந்து, 200க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குடும்பத்தினர், முளைப்பாரிகளுடன் ஊர்வலமாக, அமராவதி ஆற்றுக்கு சென்று, பூஜை செய்தனர்.