ADDED : ஆக 27, 2024 02:44 AM
ஈரோடு: கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, ஈரோடு மாநகர கிருஷ்ணர் கோவில்களில் நடந்த சிறப்பு வழிபாடுகளில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நாடு முழுவதும் கோகுலாஷ்டமி எனப்படும் கிருஷ்ண ஜெயந்தி விழா, நேற்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாப்பட்டது. இதன்படி ஈரோட்டில் ரங்கபவனம் கிருஷ்ண சமேத வீர ஆஞ்ச-நேயர் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி உற்சவம் நடந்தது. கருங்-கல்பாளையம் சீரடி சாய்பாபா கோவில் வளாகத்தில் உள்ள கிருஷ்ணருக்கு, 54 தட்டு சீர்வரிசை வைத்தல், சிறப்பு சொற்பொ-ழிவு, அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது.இஸ்கான் அமைப்பின் சார்பில், ஈரோட்டில் ஒரு திருமண மண்ட-பத்தில், கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடந்தது. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்நிகழ்வில், உலக நன்மைக்காக கோடி ஹரி நாம யஞ்னம், கோஷ்டி பாராயணம் நடந்தது. இதேபோல் ராத்திரி சத்திரம், செங்குந்தர் நகர் உள்-ளிட்ட பல்வேறு பகுதி கிருஷ்ணர் கோவில்களில், சிறப்பு அபி-ஷேகம் நடந்தது. பெரும்பாலான வீடுகளில் பெண்கள் தங்களது குழந்தைகளுக்கு கிருஷ்ணன், ராதை வேடமிட்டு, கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடினர்.
* கோபி, கோடீஸ்வரா நகரில், நந்த கோகுலம் கோசாலையில், கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக நடந்தது. சகஸ்ர நாம பெருமாளுக்கு, லட்சுமி ஹயக்ரீவர் ேஹாமம் நடந்தது. தவிர கிருஷ்ண பஜன், கிருஷ்ண குழலிசை, கிருஷ்ண வீணை இசை நிகழ்ச்சி நடந்தது.
* சென்னிமலை அருகே தண்ணீர் பந்தல், வேலம்பாளையத்தில், ௧,௦௦௦ ஆண்டுகளான சுயம்பு ஸ்ரீகிருஷ்ண பெருமாள் கோவிலில், ஐந்தாவது ஆண்டாக கிருஷ்ண ஜெயந்தி விழா, நேற்று கொண்-டாடப்பட்டது. இதையொட்டி லட்சார்ச்சனை நேற்று அதிகாலை கோபூஜையுடன் தொடங்கியது. கோவில் பட்டாச்சாரியார் ஸ்ரீலஸ்ரீ சுதர்சன பட்டாச்சாரியர் தலைமையிலான குழுவினர் இதில் ஈடு-பட்டனர். மாலையில் மஹாலட்சுமி, சுதர்ஷன ேஹாமம், பூர்-ணாகுதி, மஹா தீபாராதனை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்-தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை தென்முகம் வெள்ளோடு ஊர் பொதுமக்கள்
செய்தனர்.
*பெருந்துறை பிரசன்ன வெங்கட்டரமணசுவாமி கோவிலில், சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனை நடந்தது. பெற்-றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை போன்று வேடமிட்டு மகிழ்ந்தனர். பல வீடுகளில், வாசலில் இருந்து பூஜை அறை வரை பிஞ்சுக் குழந்தைகளின் காலடித்தடம் போல் சுவடுகளை வரைந்தனர்.
* அந்தியூர் பேட்டை பெருமாள் கோவிலில், ஸ்ரீதேவி, பூதேவி-யுடன், புல்லாங்குழல் கையிலேந்தி பெருமாள் கிருஷ்ணன், சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். இதேபோல் வெள்ளை-யம்பாளையம் கோகுல கிருஷ்ணர் கோவிலில், குழந்தை கிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.

