/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'குத்தகை அடிப்படையில் சுயஉதவி குழுவினருக்கு நிலம்'
/
'குத்தகை அடிப்படையில் சுயஉதவி குழுவினருக்கு நிலம்'
'குத்தகை அடிப்படையில் சுயஉதவி குழுவினருக்கு நிலம்'
'குத்தகை அடிப்படையில் சுயஉதவி குழுவினருக்கு நிலம்'
ADDED : செப் 03, 2024 04:21 AM
அரூர்: ''விவசாயம்
சார்ந்த மகளிர் சுயஉதவி குழுவினருக்கு, நீண்ட கால குத்தகை
அடிப்படையில், நிலம் ஒதுக்க வேண்டும்,'' என, சமூக சமத்துவப்படை
கட்சியின் நிறுவனரும், முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான சிவகாமி
கூறினார்.
தர்மபுரி மாவட்டம், அரூரில், தாலுகா அலுவலகம் முன்
நேற்று, சமூக சமத்துவப்படை கட்சி சார்பில் நடந்த, பஞ்சமி நில மீட்பு
பயணம் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த,
2006ல், தி.மு.க., அரசு ஏழைகளுக்கு, 2 ஏக்கர் இலவசமாக நிலம் வழங்கும்
திட்டத்தை அறிவித்தது. அதன்படி தமிழகம் முழுவதும், 2007ம் ஆண்டு
வரை, 2 லட்சம் ஏக்கர் நிலம் ஏழை மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.
இத்திட்டம் ஒரே ஆண்டில் கிடப்பில் போடப்பட்டது. இதற்கு போதுமான நிலம்
இல்லை என காரணம் கூறப்பட்டது. போதுமான நிலம் இல்லாத போது எப்படி
ஏழைகளுக்கு, 2 ஏக்கர் நிலம் அறிவிப்பு செய்தார்கள் என்பது
கேள்விக்குறியாக உள்ளது. சிலர், 50, 500 ஏக்கர் வரை என நிலம்
வைத்துள்ளனர். 1972 ல் இயற்றப்பட்ட நிலச்சீர்திருத்த சட்டப்படி,
அதை திருத்தி, ஒரு குடும்பம், 15 ஏக்கர் வைத்துக் கொள்ளலாம் என்ற சட்டம்
கொண்டு வந்தால் மட்டுமே ஏழைகளுக்கு, 2 ஏக்கர் நிலம் வழங்க முடியும்.
தாழ்த்தப்பட்ட
மக்களின் முக்கிய வேண்டுகோளான பஞ்சமி நிலம் மீட்பு என்பது, இன்று
வரை சாத்தியமில்லாததாக இருக்கிறது. விவசாயம் சார்ந்த மகளிர்
சுயஉதவி குழுவினருக்கு, நீண்ட கால குத்தகை அடிப்படையில், நிலம்
ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவன தலைவர் ராஜேஸ்வரிபிரியா, மாநில செயலாளர் புத்தமணி ஆகியோர் உடனிருந்தனர்.
*சமூக
சமத்துவ படை கட்சி ஒருங்கிணைக்கும் பஞ்சமி நில மீட்பு பயணம் குறித்த
கூட்டம் சேலம் உடையாப ட்டி அருகே உள்ள அதிகாரிப்பட்டி பகுதியில்,
சேலம் மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில் நடந்தது. ராஜேஸ்வரி பிரியா
வரவேற்றார்.
சமூக சமத்துவப் படை கட்சி நிறுவனத் தலைவர் சிவகாமி
பேசும்போது,''தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிலம் இல்லாத நபர்களுக்கு
நிலம் வழங்க வேண்டும். பஞ்சமி நிலம் மீட்பு பயணமாக இன்று காலை அரூரில்
துவங்கி இரண்டாவது பயணமாக சேலத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது,
தொடர்ந்து அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த மாதம் இறுதி வரை செல்ல
உள்ளோம். பஞ்சமி நிலம் மீட்கும் வரை இந்த போராட்டம் தொடரும்,'' என,
தெரிவித்தார்