/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பிறப்பு சான்றிதழில் பெயரை பதிவு செய்ய இறுதி வாய்ப்பு
/
பிறப்பு சான்றிதழில் பெயரை பதிவு செய்ய இறுதி வாய்ப்பு
பிறப்பு சான்றிதழில் பெயரை பதிவு செய்ய இறுதி வாய்ப்பு
பிறப்பு சான்றிதழில் பெயரை பதிவு செய்ய இறுதி வாய்ப்பு
ADDED : மே 31, 2024 03:34 AM
ஈரோடு: பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்ய, வரும் டிச., 31ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பிறப்பு பதிவு குழந்தையின் முதல் உரிமை. குழந்தை பிறந்த, 21 நாட்களுக்குள் பதிவு செய்து இலவச சான்றிதழ் பெற வேண்டும். பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்தால் மட்டுமே முழு சான்றிதழ் ஆகும்.
ஒரு குழந்தையின் பிறப்பு பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருப்பின், பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து, 12 மாதத்துக்குள் சம்பந்தப்பட்ட பிறப்பு-இறப்பு பதிவாளரிடம், எவ்வித கட்டணமுன்றி பதிவு செய்திடலாம். 12 மாதங்களுக்குப் பின், 15 வருடங்களுக்குள் கால தாமத கட்டணம், 200 ரூபாய் செலுத்தி பதிவு செய்யலாம். இந்த கால கால அவகாசம், 2019 டிச., 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. இதன் பிறகும் பலர் பெயர் பதிவு செய்யாமல் விட்டதால், அந்த மாணவர்களின் உயர் கல்விக்காக, வெளிநாடு செல்ல பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழ் பெற சிரமம் ஏற்பட்டது.
இதனால் பிறப்பை பதிவு செய்து, 15 ஆண்டு காலம் முடிந்தும், பெயர் பதிவு செய்யாத, அனைத்து பிறப்பு பதிவுகளுக்கும் பெயர் பதிவு செய்ய, 5 ஆண்டு அவகாசம் வழங்கப்பட்டது. அது, வரும் டிச., மாதம், 31ம் தேதியுடன் முடிகிறது.
எனவே, மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புகளில், 15 ஆண்டுகள் முடிவுற்றும் பெயர் பதிவு செய்யாதவர்கள், கால தாமத கட்டணம் செலுத்தி, பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். இந்த அவகாச நீட்டிப்பு இனி வரும் காலங்களில் வழங்கப்படாது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.