/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
போலீசாருக்கு சட்டம் குறித்த பயிற்சி வகுப்பு
/
போலீசாருக்கு சட்டம் குறித்த பயிற்சி வகுப்பு
ADDED : மே 14, 2024 08:01 AM
ஈரோடு, : சட்ட நடைமுறைகள் நாளுக்கு நாள் மாறி வருகிறது. இதுகுறித்து அறிந்து கொண்டு, அதற்கேற்ப வழக்குகளை கையாள வசதியாக, போலீசாருக்கு சட்டம் சார்ந்த பயிற்சி வகுப்பு, ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று நடந்தது.
எஸ்.ஐ.,க்கள், இன்ஸ்பெக்டர்கள், டி.எஸ்.பி.கள், ஏ.டி.எஸ்.பி.,க்கள் பங்கேற்றனர். எஸ்.பி., ஜவகர் தலைமை வகித்தார். போலீஸ் சட்ட ஆலோசகர் கணபதி பயிற்சி வகுப்பு எடுத்தார். இன்று பெருந்துறையில், பெருந்துறை மற்றும் பவானி சப்-டிவிசன் போலீசாருக்கும், 16ம் தேதி சத்தி, கோபி சப்-டிவிசன் போலீஸ் அதிகாரிகளுக்கு கோபியிலும், 17ம் தேதி ஆணைக்கல்பாளையம் ஆயுதப்படை வளாகத்தில் ஆயுதப்படை போலீஸ் அதிகாரிகளுக்கும் இந்த பயிற்சி வகுப்பு நடக்கிறது.

