/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கலெக்டர் அலுவலகத்தில்30க்கும் குறைவான மனுக்கள்
/
கலெக்டர் அலுவலகத்தில்30க்கும் குறைவான மனுக்கள்
ADDED : மே 07, 2024 02:37 AM
ஈரோடு;ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், திங்கள் கிழமை என்ற ரீதியில் பொதுமக்கள், 30க்கும் குறைவான மனுக்களை புகார் பெட்டியில் போட்டு சென்றனர்.
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், திங்கள்கிழமை தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்படும். லோக்சபா தேர்தலில் ஓட்டுப்பதிவு முடிந்தாலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், குறைதீர் கூட்டம் நடத்தப்படவில்லை. அதிகாரிகள் நேரில் மனுக்களை பெறுவதில்லை என்பதால், புகார் பெட்டி வைத்து மனுக்களை சேகரித்து, துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரைக்கின்றனர்.
இதன்படி நேற்று வீட்டுமனை பட்டா, டாஸ்மாக் கடை இடம் மாற்றுதல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, 30க்கும் குறைவான மக்களே மனுக்களை பெட்டியில் போட்டு சென்றனர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், வேறு எந்த பணிகளும் நடக்காமல் கலெக்டர் அலுவலகத்துக்கு பொதுமக்கள், அலுவலர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே வந்து சென்றதால், வெறிச்சோடி காணப்பட்டது.