ADDED : ஏப் 16, 2024 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு;லோக்சபா தேர்தல் அறிவிப்பால், கலெக்டர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் நடக்கும் மக்கள் குறைதீர் கூட்டம் கடந்த மார்ச், 15ம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதேசமயம் மக்கள் குறைகளை தெரிவிக்கும் வகையில், கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அதில் மனுக்களை மக்கள் போட்டு செல்கின்றனர். திங்கள்கிழமையான நேற்று, 40 முதல், 50க்கும் குறைவான மனுக்களே வந்தன. அதுவும் தனி நபர்கள், பட்டா, போலீஸ் நடவடிக்கை, குடும்ப பிரச்னை தொடர்பான மனுக்களை பெட்டியில் போட்டு சென்றனர்.

