/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் அழைப்பு
/
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் அழைப்பு
ADDED : ஆக 18, 2024 02:42 AM
ஈரோடு: வாழ்ந்து காட்டுவோம் திட்டம், தமிழகத்தில், 31 மாவட்டங்களில், 3,994 கிராமங்களில், 3 லட்சத்துக்கும் அதிகமான பெண்களின் வாழ்க்கையை தொழில் ஊக்குவிப்பு மூலம் சுய சார்புள்ள சமூகங்களாக உருவாக்குவதற்காக நிறுவப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் மதி சிறகுகள் தொழில் மையம், ஊரக தொழில் நிறுவனங்கள், தொழில் முனைவோருக்கு பல்வேறு மையமானது வணிக மேம்பாட்டு ஆதரவு, சேவை, வணிக ஒருங்கிணைப்பு சேவைகளை வழங்குகிறது. இதற்காக, 42 சேவை மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையமும் அடுத்தடுத்த, 2 அல்லது 3 வட்டாரங்களில் உள்ள தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு சேவை வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தொழில் முனைவோர் ஆர்வமுள்ளவர்கள், தற்போது தொழில் செய்து வருவோர், தொழில் துவங்க திட்டமிடுவோர், மிகக்குறைந்த செலவில் இம்மையத்தை அணுகி சேவை பெறலாம்.

