/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வாழ்க்கை 'வண்டியை' ஓட்ட முடியலையே! வியாபாரியின் விரக்தி விபரீதமான சோகம்
/
வாழ்க்கை 'வண்டியை' ஓட்ட முடியலையே! வியாபாரியின் விரக்தி விபரீதமான சோகம்
வாழ்க்கை 'வண்டியை' ஓட்ட முடியலையே! வியாபாரியின் விரக்தி விபரீதமான சோகம்
வாழ்க்கை 'வண்டியை' ஓட்ட முடியலையே! வியாபாரியின் விரக்தி விபரீதமான சோகம்
ADDED : ஆக 18, 2024 02:38 AM
ஈரோடு: ஈரோடு, வீரப்பன்சத்திரத்தை சேர்ந்தவர் தினேஷ், 38; இவரின் மனைவி சுமதி. தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மாநகராட்சி வழங்கிய தள்ளுவண்டியில் காய்கறி, பழங்கள் வைத்து தினேஷ் வியாபாரம் செய்து வந்தார். சில மாதங்களாக வியாபாரத்துக்கு செல்லாமல், வண்டியை பயன்படுத்தாததால் மாநகராட்சி நிர்வாகம் வண்டியை பறிமுதல் செய்தது. இதனால் சரக்கு ஆட்டோவை தயார் செய்து, சீசன் பழங்கள், காய்கறிகளை விற்பனை செய்து வருகிறார்.
கடந்த சில நாட்களாக, பெருந்துறை சாலை, குமலன்குட்டை - பழையபாளையம் பகுதியில் சாலையோரம் சரக்கு ஆட்டோவை நிறுத்தி விற்பனையில் ஈடுபட்டார். இதற்கு அப்பகுதி கடைக்காரர்கள், சில லாரி டிரைவர்கள், எதிர்ப்பு தெரிவித்து, தகராறு செய்தனராம். நேற்றும் விற்பனை துவங்கிய சில மணி நேரத்தில் அவர்கள் தகராறில் ஈடுபட்டனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தினேஷ், சரக்கு ஆட்டோவை கலெக்டர் அலுவலகத்துக்கு ஓட்டி வந்தார். அலுவலக வாசலில் நிறுத்திவிட்டு உள்ளே சென்றவர், கொண்டு வந்த டீசலை தன் மீது ஊற்றி, தீக்குளிக்க முயன்றார்.
அங்கிருந்த மக்கள், போலீசார் சேர்ந்து தடுத்து, பாட்டிலை பறித்தனர். தண்ணீர் ஊற்றி கண்டித்து, சூரம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். இதனால் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.