/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மறு தணிக்கை உத்தரவால் சிரமம் உள்ளாட்சி பணியாளர்கள் வருத்தம்
/
மறு தணிக்கை உத்தரவால் சிரமம் உள்ளாட்சி பணியாளர்கள் வருத்தம்
மறு தணிக்கை உத்தரவால் சிரமம் உள்ளாட்சி பணியாளர்கள் வருத்தம்
மறு தணிக்கை உத்தரவால் சிரமம் உள்ளாட்சி பணியாளர்கள் வருத்தம்
ADDED : செப் 15, 2024 02:13 AM
ஈரோடு: தமிழ்நாடு உள்ளாட்சி நிதி தணிக்கை பணி மன்றம் சார்பில், மாநில பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் நடந்தது. மாவட்ட தலைவர் ஜோதி வரவேற்றார். மாவட்ட மாநில பொதுச் செயலாளர் நல்லசிவம், செயலாளர் ராஜேஸ்வரி, மாநில துணை தலைவர் சோமசுந்தரம், மாடசாமி, மாவட்ட பொருளாளர் சிவகுமார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் விஜயமனோகரன் ஆகியோர் பேசினர்.
உள்ளாட்சி நிதி தணிக்கையில் பல்வேறு சிக்கல் தொடர்ந்து நீடிக்கிறது. இதனால் கடந்த, 2022ல் தலைமை தணிக்கை இயக்குனர் ஜெய்சங்கர், மத்திய அரசின் தணிக்கைப்படி மாற்றி அமைத்தார். தற்போது ஐ.ஏ.எஸ்., அதிகாரியை இயக்குனராக நியமித்து, நடப்பாண்டு தணிக்கை மட்டுமின்றி, கடந்த காலங்களில் செய்யப்பட்ட தணிக்கைகளில் குறிப்பிட்டவற்றை மறுதணிக்கை செய்ய உத்தரவிட்டுள்ளார். தேவையான அவகாசம் இல்லாததால் சிரமப்படுகிறோம். அவகாசத்துடன் தேவையான பயிற்சி வழங்க வேண்டும். அதேசமயம் இப்பிரச்னையால், தணிக்கை பணி நிறைவு பெறாத காரணம் கூறி, ஓய்வு பெறும் நிலையில், 150க்கும் மேற்பட்டோர் ஓய்வு பெற முடியாத நிலையில் உள்ளனர். அத்துடன், இத்துறையில் உள்ள அதிகப்படியான பணிகளுக்கு ஏற்ப, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று, மாநில தலைவர் அம்பேத்கார் கூறினார்.