/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஓட்டு எண்ணிக்கை நிறைவால் கிடங்குக்கு திரும்பிய இயந்திரங்கள்
/
ஓட்டு எண்ணிக்கை நிறைவால் கிடங்குக்கு திரும்பிய இயந்திரங்கள்
ஓட்டு எண்ணிக்கை நிறைவால் கிடங்குக்கு திரும்பிய இயந்திரங்கள்
ஓட்டு எண்ணிக்கை நிறைவால் கிடங்குக்கு திரும்பிய இயந்திரங்கள்
ADDED : ஜூன் 06, 2024 04:17 AM
ஈரோடு,: ஓட்டு எண்ணிக்கை நேற்று முன்தினம் நிறைவடைந்ததால், இ.வி.எம்.,கள் கிடங்குக்கு அனுப்பப்பட்டன.ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 8 சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, 2,222 ஓட்டுச்சாவடிகளுக்கு தலா, 2,663 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 2,663 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 2,885 வி.வி.பேட் ஆகியவை அனுப்பி வைத்தனர்.
வேட்பாளர்கள் எண்ணிக்கை ஈரோடு, நீலகிரி தொகுதியில் அதிகரித்ததால், ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, பவானிசாகர் ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் கூடுதலாக, 1,111 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 20 சதவீத கூடுதல் இயந்திரமாக, 221 என, 1,332 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. கடந்த ஏப்., 19ல் ஓட்டுப்பதிவு நிறைவடைந்து, நேற்று முன்தினம் ஓட்டு எண்ணிக்கையும் நிறைவடைந்தது. இதனால் நேற்று முன்தினம் இரவு முதல் ஈரோடு மாவட்டத்துக்கு உட்பட்ட, 8 சட்டசபை தொகுதியில் பதிவான, 3,995 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 2,663 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 2,885 வி.வி.பேட் ஆகியவை நேற்று போலீஸ் பாதுகாப்புடன், ஈரோடு ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில் உள்ள, 'மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர கிடங்குக்கு' லாரிகளில் கொண்டு வந்து இறக்கினர்.அவற்றை தொகுதி வாரியாக பிரித்து அடுக்கி, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில், வேட்பாளர்களின் முகவர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் அறைகளை சீல் வைத்தனர்.