/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மஹா., சந்தையில் புதிய வரத்து துவக்கம் ஈரோடு பகுதியில் உயராத மஞ்சள் விலை
/
மஹா., சந்தையில் புதிய வரத்து துவக்கம் ஈரோடு பகுதியில் உயராத மஞ்சள் விலை
மஹா., சந்தையில் புதிய வரத்து துவக்கம் ஈரோடு பகுதியில் உயராத மஞ்சள் விலை
மஹா., சந்தையில் புதிய வரத்து துவக்கம் ஈரோடு பகுதியில் உயராத மஞ்சள் விலை
ADDED : மே 15, 2024 02:07 AM
ஈரோடு:மஹாராஷ்டிரா சந்தைக்கு புது மஞ்சள் வரத்து அதிகரித்துள்ளதால், ஈரோடு பகுதியில் மஞ்சள் விலை உயராமல் தொடர்கிறது.
இதுகுறித்து ஈரோடு மஞ்சள் வணிகர் மற்றும் கிடங்கு உரிமையாளர் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி கூறியதாவது: கடந்த மார்ச்சில் ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டில் புது மஞ்சள் தரமாக வரத்தானது. சேலம் பெருவட்டு மஞ்சள் குவிண்டால், 21,000 ரூபாய் வரை விற்பனையானது. அப்போது மஹாராஷ்டிரா உட்பட பல மாநிலங்களில் புது மஞ்சள் அறுவடையாகவில்லை.
தற்போது புது மஞ்சள் மஹாராஷ்டிராவில் அறுவடையாகி, சந்தைக்கு வரத்து அதிகரித்துள்ளது. அங்கு தரத்துக்கேற்ப பல்வேறு விலையில் விலை போவதால், ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டில் மஞ்சள் தேக்கம் அடைந்துள்ளது. ஆனாலும், விலை உயரும் என்ற நோக்கில், விவசாயிகள் புது மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வராமல் உள்ளனர். இதனால் ஈரோட்டில் மஞ்சள் விலை தொடர்ந்து, 17,000 முதல், 18,000 ரூபாய்க்குள் நீடிக்கிறது. இவ்வாறு கூறினார்.
பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று விரலி குவிண்டால், 9,235 - 17,419 ரூபாய்; கிழங்கு, 8,211 - 16,449 ரூபாய்க்கு விற்றது. ஈரோடு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் விரலி, 11,899 - 17,483, கிழங்கு, 10,699 - 16,356 ரூபாய்; ஈரோடு சொசைட்டியில் விரலி, 11,989 - 17,300 ரூபாய்; கிழங்கு, 12,399 - 16,399 ரூபாய்க்கு விற்றது. கோபி சொசைட்டியில் விரலி, 13,104 - 17,359, கிழங்கு, 12,906 - 16,500 ரூபாய்க்கும் விற்றது.

