ADDED : செப் 16, 2024 03:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: தாராபுரத்தில், ஓணம் பண்டிகையை, கேரள மக்கள் நேற்று உற்சாகமாக கொண்டாடினர்.
தாராபுரம் நகரில் கணிசமான எண்ணிக்கையில், கேரள மக்கள் வாழ்கின்றனர். திருவோண நாளில், மகாபலி சக்கரவர்த்தி வீதி உலா வருவது என்பது, கேரள மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
இந்நிலையில் நேற்று ஓணம் பண்டிகையை ஒட்டி, வீடுகள் முன் பாரம்பரிய அத்தப்பூ கோலமிட்டு, நெல், தென்னங்கதிர்களை வைத்து பூஜை செய்தனர். அக்கம்பக்கத்தினருக்கு விருந்து கொடுத்து, மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

