/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இளம்பெண், மாணவி உள்பட ௩ பேர் மாயம்
/
இளம்பெண், மாணவி உள்பட ௩ பேர் மாயம்
ADDED : ஜூன் 22, 2024 02:37 AM
ஈரோடு:மொடக்குறிச்சி
அருகே செலம்பகவுண்டன்பாளையம், காமராஜர் தெருவை சேர்ந்தவர்
மோகன்ராஜ், 47; போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவரின் மனைவி
நாமக்கல் மாவட் டம் நெய்க்காரம்பட்டியை சேர்ந்த நதியா. கடந்த மே முதல்
இருவருக்கும் கருத்து வேறுபாட்டால் சண்டை ஏற்பட்டு, பேசாமல்
இருந்தனர். கடந்த, 20ல் வீட்டைவிட்டு நதியா வெளியே சென்றவர் மீண்டும்
வீடு திரும்பவில்லை. மொடக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.
*
திருப்பூர், முதலிபாளையம், வேப்பங்காடு, மணியக்காரர் தோட்டத்தை
சேர்ந்த சத்தியமூர்த்தி மகள் ஸ்வாதி, 19; ஈரோட்டில் தனியார்
கல்லுாரியில் பி.பி.ஏ., (சி.ஏ.,) படிக்கிறார். தினமும் கல்லுாரி
பஸ்ஸில் வந்து செல்கிறார். கடந்த, 19ல் கல்லுாரி முடிந்து வீடு
திரும்பவில்லை. தந்தை புகாரின்படி, ஈரோடு தாலுகா போலீசார், மாணவியை
தேடி வருகின்றனர்.
* ஈரோடு, கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர்
மகேஸ்வரன், 36, தனியார் நிறுவன ஊழியர். தாய், மனைவி மற்றும்
குழந்தைகளுடன் வசித்து வருகிறார். பைனான்ஸ் நிறுவனத்தில் கடன்
பெற்றுள்ளார். கடனை திரும்ப செலுத்த முடியாத நிலையில், 20ம் தேதி
வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. தாயார் காளியம்மாள்
புகாரின்படி, கருங்கல்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.