/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாநில எல்லையில் மாவோயிஸ்ட் நடமாட்டம்; ரோந்து பணி தீவிரம்
/
மாநில எல்லையில் மாவோயிஸ்ட் நடமாட்டம்; ரோந்து பணி தீவிரம்
மாநில எல்லையில் மாவோயிஸ்ட் நடமாட்டம்; ரோந்து பணி தீவிரம்
மாநில எல்லையில் மாவோயிஸ்ட் நடமாட்டம்; ரோந்து பணி தீவிரம்
ADDED : ஆக 08, 2024 12:43 AM
ஈரோடு:மாவோயிஸ்ட்கள் நடமாட்டத்தை கண்காணிக்க, கர்நாடகா மாநில எல்லையில் கூட்டு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டது.
மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் குறித்து அறிய, அவ்வப்போது ஈரோடு மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவு போலீசார், அடர்ந்த வனப்பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன், கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாவோயிஸ்ட்கள் ஈரோடு வந்து தங்கி சென்றது தெரியவந்தது. இது போலீசாரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்நிலையில் நேற்று முன்தினம் கர்நாடகா மாநில எல்லை வரை, ஈரோடு மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவு போலீசார், வனத்துறை மற்றும் சிறப்பு இலக்கு படையுடன் இணைந்து கூட்டு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இதுபற்றி போலீசார் கூறியதாவது:
தாளவாடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட எட்டிகட்டையில் இருந்து, கர்நாடகா மாநில எல்லையில் உள்ள கொங்ஹள்ளி கோவில் வரை, 12.5 கி.மீ., துாரம் துப்பாக்கி ஏந்தியபடி, நான்கு மலைகளை கடந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டோம்.
நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் 12 பேர், வனத்துறையினர் இருவர், சிறப்பு இலக்கு படையைச் சேர்ந்த ஒருவர் இணைந்து தேடுதலில் ஈடுபட்டோம். வனத்துறையினர், அங்குள்ள வாட்ச் டவரில் இருந்து மனிதர்கள் நடமாட்டத்தை கண்காணித்துள்ளனர்.
தேடுதலின் போது மான்கள், யானைகளை அடர்ந்த வனப்பகுதியில் பார்த்தோம். ஆட்கள் நடமாட்டத்தை காண முடியவில்லை.
இவ்வாறு கூறினர்.