/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மலை கிராமத்தில் மருத்துவ குழு முகாம்
/
மலை கிராமத்தில் மருத்துவ குழு முகாம்
ADDED : ஜூன் 30, 2024 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம், சத்தியமங்கலம் யூனியன் குத்தியாலத்துார் ஊராட்சிக்கு உட்பட்ட உகினியம் மலை கிராமத்தில், கடந்த சில நாட்களாக வாந்தி பேதியால் பலர் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து நமது நாளிதழில் நேற்று செய்தி வந்தது.
இதன் எதிரொலியாக, சத்தியமங்கலத்திலிருந்து மருத்துவ குழுவினர் உகினியம் மலை கிராமத்துக்கு சென்றனர். மக்களை வீடு, வீடாக சந்தித்து மருந்து, மாத்திரை வழங்கினர். தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும். சுற்றுப்புறத்தை துாய்மையாக வைத்திருக்கவும் அறிவுறுத்தினர்.

