/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தாயை துாக்கி சென்ற மகள் 2 அதிகாரிகளுக்கு 'மெமோ'
/
தாயை துாக்கி சென்ற மகள் 2 அதிகாரிகளுக்கு 'மெமோ'
ADDED : மே 28, 2024 08:43 PM
ஈரோடு:ஈரோடு பெரியவலசு பகுதியை சேர்ந்தவர் சொர்ணா, 75. நேற்று முன்தினம் சாலையில் சென்றபோது டூ--வீலர் மோதி, காலில் காயமடைந்தார். அவரது மகள் வளர்மதி, ஆட்டோவில் சொர்ணாவை அழைத்து கொண்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு வந்தார். 'தாயால் நடக்க முடியவில்லை' எனக்கூறி ஸ்ட்ரெச்சர் கேட்டார். நீண்ட நேரமாகியும் வழங்காததால், வலியால் துடித்த தாயை, வளர்மதி துாக்கி கொண்டு மருத்துவமனை வளாகத்துக்குள் சென்றார்.
அங்கிருந்த ஊழியர்கள், 'ஓ.பி., சீட்டு வாங்கி வந்தால் மட்டுமே அனுமதிப்போம்' என்றனர். இதனால் மீண்டும் தாயை துாக்கி கொண்டு, ஓ.பி., சீட்டு வாங்கி கொண்டு மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவுக்கு வந்தார். இதை அங்கிருந்தவர்கள் மொபைல் போனில் வீடியோ எடுத்து வெளியிட்டனர்.
இதை பார்த்த சென்னையில் உள்ள சுகாதார துறையினர், ஈரோடு அரசு மருத்துவமனை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பி, கண்காணிப்பாளர் வெங்கடேஷ், உறைவிட மருத்துவ அலுவலர் சசிரேகா ஆகியோருக்கு 'மெமோ' வழங்கியுள்ளனர்.