/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அத்திக்கடவு திட்டத்துக்காக பா.ஜ., உண்ணாவிரதம் அறிவிப்பு தள்ளி வைக்க அமைச்சர் முத்துசாமி கோரிக்கை
/
அத்திக்கடவு திட்டத்துக்காக பா.ஜ., உண்ணாவிரதம் அறிவிப்பு தள்ளி வைக்க அமைச்சர் முத்துசாமி கோரிக்கை
அத்திக்கடவு திட்டத்துக்காக பா.ஜ., உண்ணாவிரதம் அறிவிப்பு தள்ளி வைக்க அமைச்சர் முத்துசாமி கோரிக்கை
அத்திக்கடவு திட்டத்துக்காக பா.ஜ., உண்ணாவிரதம் அறிவிப்பு தள்ளி வைக்க அமைச்சர் முத்துசாமி கோரிக்கை
ADDED : ஆக 05, 2024 06:53 AM
ஈரோடு: அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை உடனடியாக நிறைவேற்றக்-கோரி, பா.ஜ., சார்பில் வரும், 20ம் தேதி உண்ணாவிரதம் அறி-விக்கப்பட்டுள்ளது. இதை தள்ளி வைக்குமாறு, அமைச்சர் முத்து-சாமி வலியுறுத்தியுள்ளார்.
அத்திகடவு-அவிநாசி திட்டப்பணிகள் குறித்து, அலுவலர்களுட-னான ஆய்வுக்கூட்டம், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, டி.ஆர்.ஓ., சாந்த-குமார், நீராதாரத்துறை கண்காணிப்பு பொறியாளர் திருமலை குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி தலைமை வகித்தார். பின் அத்திகடவு-அவிநாசி திட்டத்துக்கு, நிலம் கொடுத்தவர்களுடன் ஆலோசனை கூட்டமும் நடந்தது.
இதுகுறித்து அமைச்சர் முத்து சாமி, நிருபர்களிடம் கூறியதாவது:
அத்திகடவு-அவிநாசி திட்டம் தாமதமாவதற்கு அரசு காரணம் என தகவல் வெளியாகிறது. இதற்கு அரசு காரணமல்ல. இத்திட்-டத்தில் ஆறு பம்பிங் ஸ்டேஷன் உள்ள நிலையில் முதல் மூன்று பம்பிங் ஸ்டேஷன் இடையேயான நிலம் கையகப்படுத்தபடாமல் இருந்தது. விவசாயிகளிடம் பேசி நிலத்தை பயன்படுத்தவும், கையகப்படுத்தவும் சம்மதிக்க செய்தோம். பணி நடக்க தி.மு.க., அரசு தான் காரணம். காவிரி அல்லது பவானி ஆற்றில் இருந்து நீர் எடுக்கலாம் என கூறுகின்றனர். 1.5 டி.எம்.சி., நீரை எடுப்பது தான் முறை. ஆனால் விதிகளின் படி மட்டுமே நீரை எடுக்க முடியும். தற்போது தண்ணீர் குறைவாக இருக்கிறது. 83 பீடர் லைனில் 1,045 குளங்களை நிரப்ப வேண்டும். ஒரு பீடர் லைனில் பழுது ஏற்பட்டால் அதன் மூலம், 7 குளங்களுக்கு போக வேண்டிய நீர் செல்ல முடியவில்லை. இதை முழுமையாக சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர சிறிது அவகாசம் தேவைப்படுகிறது. 1,045 குளங்களுக்கு தண்ணீர் செல்ல தொடர்ந்து சோதனை ஓட்டம் நடக்கிறது.
கீழ்பவானி வாய்க்காலில் ஆக.,15ல் தண்ணீர் திறக்கும் நிலையில் அதன் பின், 10 முதல், 15 நாட்களில் கசிவு நீர் கிடைக்கும். 6 பம்பிங் ஸ்டேஷன்களையும் ஒரே நேரத்தில் இயக்கினால்தான் அனைத்து குளங்களுக்கும் நீர் போய் சேரும். 70 நாட்கள் அதை தொடர்ச்சியாக எடுக்க வேண்டும். இது தான் திட்டம்.
இதற்கு முன் பலமுறை திட்டம் செயல்பாட்டுக்கான நேரத்தை குறிப்பிட்டது, அதிகாரிகள் வேகமாக பணிகளை மேற்கொள்வ-தற்காகவே தவிர, ஏமாற்றுவதற்காக அல்ல. திட்டத்துக்கு 1,416 விவசாயிகள் நிலம் கொடுத்துள்ளனர். 100 விவசாயிகளுக்கு மட்டும் நிலத்துக்கான இழப்பீட்டு தொகை தர வேண்டும். இத்-திட்டத்தில், 1,045 குளங்களுக்கு மேல் சேர்க்க முடியாது. கூடுதல் குளங்களை சேர்க்க தனி திட்டம்தான் போட வேண்டும். கீழ்பவானி வாய்க்காலில் பக்கவாட்டு சுவர் கட்டுவதால், கசிவு நீர் கிடைப்பதில் எந்த பிரச்னையும் இல்லை. நீதிமன்ற வழிகாட்-டுதல்படி பணி நடக்கிறது. பா.ஜ.,வினர் ஏற்கனவே இத்திட்ட செயல்பாட்டுக்காக போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்-தனர். அப்போது அவர்களிடம் இதுபற்றி பேசி இருக்கிறோம். அவர்கள் இப்பிரச்னையில் அரசியல் செய்கிறார்கள் என கூற முடி-யாது. அவர்கள் கோரிக்கை நியாயமானது. அவர்களுக்கு திட்-டத்தில் உள்ள பிரச்னை குறித்து விளக்கமளிக்க தயாராக உள்ளோம். அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பா.ஜ.,வினர் அறிவித்துள்ள உண்ணாவிரத போராட்டத்தை தள்ளி வைக்க வேண்டும். கசிவு நீர் வந்த பிறகும் திட்டம் தாமத-மானால் நானும் கூட அவர்களுடன் இருப்பேன். பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலைக்கு திட்டம் குறித்து, நிலைமையை முழுமையாக சொல்லவில்லை. இவ்வாறு அமைச்சர் கூறினார்.