/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கூட்டு குடிநீர் திட்ட பணிகளை அமைச்சர் சாமிநாதன் ஆய்வு
/
கூட்டு குடிநீர் திட்ட பணிகளை அமைச்சர் சாமிநாதன் ஆய்வு
கூட்டு குடிநீர் திட்ட பணிகளை அமைச்சர் சாமிநாதன் ஆய்வு
கூட்டு குடிநீர் திட்ட பணிகளை அமைச்சர் சாமிநாதன் ஆய்வு
ADDED : செப் 10, 2024 07:25 AM
ஈரோடு: தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் சாமிநாதன், ஈரோடு கோணவாய்க்கால் மற்றும் மொடக்குறிச்சி ஒன்றியம் சாத்தம்பூர் பகுதியில், சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தின், 434 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டத்தின் தலைமை நீரேற்று நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின் சென்னிமலை யூனியன் முகாசிபிடாரியூர், முருங்கத்தொழுவு, ஒட்டப்பாறை ஊராட்சிகள், சென்னிமலை பேரூராட்சி பகுதிகளில் நடக்கும் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் மக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக, துறை அலுவலர்களான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றார். முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் கீழ், சென்னிமலை கால்நடை மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட கால்நடை மருத்துவ ஊர்திக்கான சாவியை, அமைச்சர் வழங்கினார்.அமைச்சர் ஆய்வின் போது கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, எம்.பி., பிரகாஷ், மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ் உள்ளிட்டோர் சென்றனர்.