/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடில் 'சிந்தடிக் டிராக்' அமைச்சர் உதயநிதி திறப்பு
/
ஈரோடில் 'சிந்தடிக் டிராக்' அமைச்சர் உதயநிதி திறப்பு
ஈரோடில் 'சிந்தடிக் டிராக்' அமைச்சர் உதயநிதி திறப்பு
ஈரோடில் 'சிந்தடிக் டிராக்' அமைச்சர் உதயநிதி திறப்பு
ADDED : ஆக 02, 2024 10:27 PM
ஈரோடு:ஈரோடில், செயற்கை இழை ஓடுதளத்துடன் மேம்படுத்தப்பட்ட வ.உ.சி., விளையாட்டு மைதானத்தை, விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும், ஈரோடு வ.உ.சி., விளையாட்டு மைதானத்தில், 7.57 கோடி ரூபாய் மதிப்பில் சிந்தடிக் டிராக் எனப்படும் செயற்கை இழை ஓடுதளம், 48.50 லட்சம் ரூபாய் மதிப்பில், வ.உ.சி., மகளிர் விளையாட்டு விடுதி புனரமைப்பு செய்யப்பட்டது.
பணி நிறைவடைந்த நிலையில், மேம்படுத்தப்பட்ட விளையாட்டு மைதானத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார். அமைச்சர்கள், முத்துசாமி, சாமிநாதன் முன்னிலை வகித்தனர்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, மைதானத்தை திறந்து வைத்தார். செயற்கை இழை ஓடுதளம், புல்வெளியுடன் கூடிய கால்பந்து மைதானத்தை பார்வையிட்டார். பின், விளையாட்டு மைதானத்தில் உள்ள விளையாட்டு மாணவியர் விடுதி அறைகளை ஆய்வு செய்தார். மக்கள் அளித்த மனுக்களை பெற்றுக் கொண்டார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அரசு கூடுதல் தலைமை செயலர் அதுல்ய மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, எம்.பி.,க்கள் அந்தியூர் செல்வராஜ், பிரகாஷ், எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம், மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், மாநகராட்சி ஆணையர் மணீஷ், மாவட்ட விளையாட்டு அலுவலர் சதீஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.