கீழ்பவானி தண்ணீர் விவகாரம் டி.ஆர்.ஓ.,வுடன் எம்.எல்.ஏ., சந்திப்பு
கீழ்பவானி தண்ணீர் விவகாரம் டி.ஆர்.ஓ.,வுடன் எம்.எல்.ஏ., சந்திப்பு
ADDED : நவ 26, 2026 01:34 AM
சென்னிமலை: கீழ்பவானி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கக்கோரி, விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் அறிவித்திருந்த நிலையில், டி.ஆர்.ஓ., ஜெயராமன் தலைமையில் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், உடன்பாடு ஏற்படாத நிலையில், இன்று கீழ்பவானி பாசனத்தை சார்ந்த மற்ற அமைப்புகளையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த, மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, காங்கேயம் எம்.எல்.ஏ., நடராஜ், கீழ் பவானி பாசன விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன், நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயராமனை சந்தித்து பேசினார். அப்போது, கீழ்பவானி முதலாவது மண்டலத்திற்கு டிச., 15ம் தேதி வரை தண்ணீர் வழங்க வேண்டும் என்றும், தொடர்ந்து இரண்டாவது மண்டல புன்செய் பாசனத்திற்கு ஏப்., 15ம் தேதி வரை தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எம்.எல்.ஏ., நடராஜ் கோரிக்கை விடுத்தார்.
