'டார்ச் லைட்' வெளிச்சத்தில் மாணவியருக்கு தோசை சுட்டு பரிமாறிய அமைச்சர்
'டார்ச் லைட்' வெளிச்சத்தில் மாணவியருக்கு தோசை சுட்டு பரிமாறிய அமைச்சர்
ADDED : நவ 26, 2026 01:34 AM
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரிக்கு நேற்று வந்த, தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னிஅரசு, பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பையர்நத்தம் அரசு சமூக நீதி மாணவியர் விடுதியில் மாலை, 6:00 மணியளவில் ஆய்வு செய்தார்.
அப்போது மின்தடையால், விடுதி இருளில் மூழ்கியது. பின் 'டார்ச் லைட்' வெளிச்சத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், மாணவியரிடம் வழங்கப்படும் உணவு குறித்தும், வேறென்ன உணவுகள் தேவை எனவும் கேட்டறிந்தார். பின் சமையலறைக்கு சென்றவர், 'டார்ச் லைட்' வெளிச்சத்தில் தோசை சுட்டு, மாணவியருக்கு பரிமாறி, அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். அப்போது மாணவியர் கேட்டு கொண்டதற்கு இணங்க, பொங்கலுடன் சட்னியும் சேர்த்து வழங்க வார்டன் அமுதாவிடம் அறிவுறுத்தினார். ஆய்வின் போது, அரூர் ஆர்.டி.ஓ., ஹரி பிரியங்கா, பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் லட்சுமி, தனி தாசில்தார் செல்வகுமார் உடனிருந்தனர். பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் சமூகநீதி மாணவர் விடுதி, மாணவியர் விடுதி மற்றும் அரசு கல்லுாரி சமூகநீதி மாணவியர் விடுதிக்கு, அமைச்சர் ஆய்வுக்கு வருகிறார் என கூறப்பட்டதால், மாலை, 4:00 மணி முதல், மாணவ, மாணவியர் காத்திருந்தனர். இரவு, 7:15 மணிக்கு, அமைச்சர் வருகை ரத்து என கூறப்பட்டதால்,
அவர்கள் ஏமாற்றமடைந்தனர்.
