ADDED : நவ 26, 2026 01:35 AM
அ நிறம் | அளவு
ஈரோடு: நசியனுார் வேட்டுவ
பாளையம் குமரன் நகரை சேர்ந்தவர் விவசாயி கார்த்திகேயன். நேற்று முன்தினம் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு, அகல் விளக்குகளை ஜன்னல் ஓரம் ஏற்றி வைத்திருந்தனர்.
இந்நிலையில், காற்றுக்கு ஜன்னலில் இருந்த திரை சீலை அகல்விளக்கு தீயில் பட்டு தீப்பிடித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் தீ வேகமாக பரவியது. இதுகுறித்து நேற்று முன்தினம் இரவு, 9:30 மணிக்கு கார்த்திகேயன், ஈரோடு தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் வீட்டு உபயோக பொருட்கள், கட்டில், ஏ.சி. உள்ளிட்டவை தீக்கிரையாகின. சேத மதிப்பு ஒன்றரை லட்சம் ரூபாயாக கணக்கிடப்பட்டுள்ளது.
