தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/தாக்குதல் சம்பவம் எதிரொலி சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு

தாக்குதல் சம்பவம் எதிரொலி சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு

தாக்குதல் சம்பவம் எதிரொலி சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு


ADDED : நவ 26, 2026 01:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 26, 2026 01:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு பி.எஸ்.பார்க் மற்றும் முனிசிபல் காலனியில் உள்ள, முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலைகள், அதன் கீழ் உள்ள நுாலக கண்ணாடி, மொடக்குறிச்சி அருகே கருணாநிதி சிலை, நுாலக கண்ணாடிகளை நேற்று முன்தினம் ஹரிவிக்னேஷ் என்பவர் கம்பியால் தாக்கி சேதப்படுத்தினார்.

தி.மு.க.,வினர் மறியலில் ஈடுபட்ட நிலையில், ஹரி விக்னேைஷ போலீசார் கைது செய்து, 'அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர்' என ஆரம்பத்தில் கூறி, அவரது முகநுால் பக்கத்தை ஆய்வு செய்தபோது, அவர் த.வெ.க., அனுதாபி என தெரியவந்தது. பின், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இருப்பினும், அவர் சிலைகளை உடைக்கும்போது, வேறு ஒரு நபருடன் மொபைல் போனில் பேசியவாறே சேதப்படுத்தியதை 'சிசிடிவி'யில் உறுதி செய்தனர்.

எனவே, ஹரி விக்னேைஷ துாண்டிய நபர், மீண்டும் தாக்குதலில் ஈடுபடலாம் என்ற அச்சமும் நிலவுகிறது. இந்நிலையில், ஈரோடு பி.எஸ்.பார்க், முனிசிபல் காலனி, மொடக்குறிச்சி அருகே என முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலைகள் உள்ள இடங்களில், 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us