/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விவசாயிகளுக்கு இலவச காப்பீடு திட்டம்நடைமுறைப்படுத்த எம்.எல்.ஏ., மனு

ADDED : மார் 09, 2025 01:36 AM
விவசாயிகளுக்கு இலவச காப்பீடு திட்டம்நடைமுறைப்படுத்த எம்.எல்.ஏ., மனு
பெருந்துறை:ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட கலெக்டர்களுக்கு, பெருந்துறை எம்.எல்.ஏ., ஜெயகுமார் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் கடந்த ஏழு மாதங்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெள்ளாடுகள், செம்மறியாடுகளை மர்ம விலங்குகள் மற்றும் தெரு நாய்கள் கடித்து இறந்துள்ளன. இதுவரை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, 40 நாட்களில் இழப்பீட்டு தொகை வழங்கப்படும். 20 நாட்களில் வழங்கப்படும், 2 நாட்களில் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகங்களால் கடிதம் வாயிலாக எழுதி கொடுக்கப்பட்ட உத்தரவாதத்தை நடைமுறைப்படுத்தவில்லை.
இதுகுறித்து, சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானமும், மாவட்ட கலெக்டர்களின் கவனத்திற்கு பலமுறை கொண்டு சென்று கோரிக்கை வைத்த பின்பும், விவசாயிகளுக்கான இழப்பீடு வழங்கப்படவில்லை, அரசாணையும் பிறப்பிக்கப்படவில்லை. கால்நடை வளர்ப்பவர்களை அந்தந்த வி.ஏ.ஓ., மூலம் கணக்கெடுப்பு செய்து, இலவச காப்பீட்டு திட்ட வசதியை ஏற்படுத்தி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.