/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பண்ணாரி அம்மன் கோவிலில் எம்.எல்.ஏ.,க்கு அதிர்ச்சி
/
பண்ணாரி அம்மன் கோவிலில் எம்.எல்.ஏ.,க்கு அதிர்ச்சி
ADDED : மார் 27, 2024 07:57 AM
சத்தியமங்கலம் : சத்தியமங்கலம் அருகேயுள்ள, பண்ணாரி மாரியம்மன் கோவிலில், குண்டம் விழா நேற்று நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் பங்கேற்க பவானிசாகர் தொகுதி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., பண்ணாரி குடும்பத்தினருடன் கோவிலுக்கு நள்ளிரவு, 1:30 மணிக்கு வந்தார்.
கோவில் நுழைவுவாயிலில் இருந்த போலீசார், அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. அடையாள அட்டையை காண்பித்தும் அனுமதி மறுக்கவே, போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஒரு மணி நேரம் காத்திருந்த நிலையில், கோவில் செயல் அலுவலரை மொபைல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அதன் பிறகே போலீசார், எம்.எல்.ஏ.,வை கோவிலுக்குள் அனுமதித்தனர். இதனால் எம்.எல்.ஏ., கடும் அதிருப்தி அடைந்தார்.

