ADDED : ஜூலை 17, 2025 02:01 AM
வர்த்தகம்
* மொடக்குறிச்சி உப ஒழுங்கு
முறை விற்பனை கூடத்தில், நேற்று ஒரு கிலோ பச்சை தேங்காய், 45.10 முதல், 63.88 ரூபாய்; கசங்கல் தேங்காய், 60.79 முதல், 70.99 ரூபாய் என, மொத்தம், 26,004 கிலோ தேங்காய், 16 லட்சத்து, 77,975 ரூபாய்க்கு விற்பனையானது.
கொப்பரை தேங்காய், முதல் தரம் கிலோ, 221.80 முதல், 242 ரூபாய்; இரண்டாம் தரம், 105 முதல், 223.99 ரூபாய் என, 7,269 கிலோ கொப்பரை தேங்காய், 16 லட்சத்து, 3,710 ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய் சேர்த்து, 32 லட்சத்து, 81,685 ரூபாய்க்கு விற்பனையானது.
* சத்தியமங்கலம் பூ சந்தையில், மல்லிகை பூ கிலோ, 600 ரூபாய், முல்லை, 280, காக்கட்டான், 175, செண்டு மல்லி, 90, கோழிக்கொண்டை, 90, ஜாதி முல்லை 600, கனகாம்பரம், 450, சம்பங்கி, 80, அரளி, 120, துளசி, 60, செவ்வந்தி, 280 ரூபாய்க்கு விற்பனையானது.
* பெருந்துறை வேளாண் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், இரண்டு லட்சத்து, 89,000 கிலோ கொப்பரையை, விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். முதல் தரம் குறைந்தபட்சம், 220 ரூபாய், அதிகபட்சம், 248.80 ரூபாய்; இரண்டாம் தரம், குறைந்தபட்சம், 42.45 ரூபாய், அதிகபட்சம், 244.10 ரூபாய் என, ஆறு கோடியே, 76 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
* வெள்ளகோவில் ஒழுங்கு
முறை விற்பனை கூடத்தில், 26,000 கிலோ தேங்காய் பருப்பு வரத்தானது. முதல் தரம் அதிக
பட்சம், ஒரு கிலோ, 247.89 ரூபாய், இரண்டாம் தரம், 160.19 ரூபாய் என, 61 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகமானது.
* அந்தியூர், புதுப்பாளையம் கூட்டுறவு சங்கத்தில் நடந்த ஏலத்தில், 2,100 வாழைத்தார்கள் வரத்தாகின. இதில் செவ்வாழை தார், 150 முதல், 920 ரூபாய், தேன் வாழை, 90 முதல், 700 ரூபாய், பூவன், 120 முதல், 680 ரூபாய், ரஸ்தாளி, 340 முதல், 850 ரூபாய், மொந்தன், 60 முதல், 410 ரூபாய், ஜி-9, 180 முதல், 520 ரூபாய், பச்சைநாடன், 320 முதல், 500 ரூபாய், கதலி கிலோ, 32 முதல், 55 ரூபாய், நேந்திரன் கிலோ, 15 முதல், 28 ரூபாய் என, 5.29 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.