/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நஞ்சை ஊத்துக்குளி வாய்க்காலை துார்வாரும் பணியில் நவீன இயந்திரம்
/
நஞ்சை ஊத்துக்குளி வாய்க்காலை துார்வாரும் பணியில் நவீன இயந்திரம்
நஞ்சை ஊத்துக்குளி வாய்க்காலை துார்வாரும் பணியில் நவீன இயந்திரம்
நஞ்சை ஊத்துக்குளி வாய்க்காலை துார்வாரும் பணியில் நவீன இயந்திரம்
ADDED : செப் 15, 2024 01:07 AM
நஞ்சை ஊத்துக்குளி வாய்க்காலை
துார்வாரும் பணியில் நவீன இயந்திரம்
ஈரோடு, செப். 15-
பெரும்பள்ளம் ஓடையின் நடுவே உள்ள, சூரம்பட்டி தடுப்பணை நீரை ஆதாரமாக கொண்டுள்ள, 2,450 ஏக்கருக்கு ஆண்டுக்கு, 10 மாதங்கள் நீர் வழங்கும் நஞ்சை ஊத்துக்குளி வாய்க்காலில் துார்வரும் பணி தற்போது நடந்து வருகிறது.
இதற்காக பொள்ளாச்சியில் இருந்து அதி நவீன தொழில் நுட்ப வசதி கொண்ட இயந்திரம் வரவழைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாய்க்காலில் குறுகிய மற்றும் 30 அடி ஆழம் கொண்ட பகுதியில் துார்வாரும் பணி மேற்கொள்ளப்படுகிறது. மேலும் வாய்க்காலை மறைத்தபடி வளர்ந்த மர கிளைகள், மரம், செடி-கொடிகளை தொழிலாளர்கள் வெட்டி அகற்றுகின்றனர்.
வடகிழக்கு பருவ மழை துவங்கும் முன் வாய்க்காலை துார்வாரி, கடைமடை வரை தண்ணீர் செல்ல வழிவகை செய்யப்பட இருப்பதாக நீர்வளத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.