/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
திருமண விழாவிற்கு சென்ற தாய், மகன் விபத்தில் இறப்பு
/
திருமண விழாவிற்கு சென்ற தாய், மகன் விபத்தில் இறப்பு
திருமண விழாவிற்கு சென்ற தாய், மகன் விபத்தில் இறப்பு
திருமண விழாவிற்கு சென்ற தாய், மகன் விபத்தில் இறப்பு
ADDED : மார் 10, 2025 05:50 AM

புன்செய்புளியம்பட்டி: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே செம்படார்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ், 23; பண்ணாரியம்மன் சர்க்கரை ஆலை ஊழியர். இவரது தாய் உண்ணாத்தாள், 60. இருவரும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, புன்செய் புளியம்பட்டிக்கு நேற்று காலை 'யமஹா' எம்.டி., 15 பைக்கில் சென்றனர்.
சத்தி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் புன்செய்புளியம்பட்டி அருகே நல்லுாரில், கேரளாவில் இருந்து மைசூரு நோக்கி அதிவேகமாக வந்த லாரி, முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்றபோது, எதிரே வந்த டூ - வீலர் மீது மோதியது.
இதில், 10 அடி துாரத்துக்கு துாக்கி வீசப்பட்ட உண்ணாத்தாள் சம்பவ இடத்தில் பலியானார். படுகாயமடைந்த ரமேஷ் சத்தி அரசு மருத்துவமனை செல்லும் வழியில் இறந்தார்.
புன்செய்புளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து, கேரள மாநிலம், மூவாட்டுப்புழா லாரி டிரைவர் சினோய், 40, என்பவரை விசாரிக்கின்றனர்.