/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நம்பியூர் கிரேடு 1 போலீஸ் 'டிஸ்மிஸ்'
/
நம்பியூர் கிரேடு 1 போலீஸ் 'டிஸ்மிஸ்'
ADDED : மே 26, 2024 12:23 AM
நம்பியூர்:ஈரோடு மாவட்டம், நம்பியூர் போலீஸ் ஸ்டேஷனில், கிரேடு - 1 போலீஸ்காரராக இருந்தவர் பூமாலை, 38; சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர், 2009ல் பணியில் சேர்ந்தார். ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபாடுள்ள இவர், மனைவி கண்டித்தும் பழக்கத்தை கைவிடவில்லை. இதனால், குழந்தைகளுடன் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
தொடர்ந்து, அந்தியூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். கடந்த ஆண்டு அந்தியூர் பகுதி கடைகளில், தீபாவளி வசூலில் ஈடுபட்டுள்ளார். ஆதாரங்களுடன் கடை உரிமையாளர் தரப்பில் புகார் தெரிவிக்கவே, தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். ஏப்., 30ல், நம்பியூர் போலீஸ் ஸ்டேஷனில் பணி வழங்கப்பட்டது.
தீபாவளி மாமூல் வசூல், குழந்தைகளுடன் மனைவி தற்கொலை உள்ளிட்ட ஒழுங்கீன செயல் தொடர்பாக, பூமாலையிடம் துறை ரீதியான விசாரணை நடந்து வந்தது. இதன் அடிப்படையில் பூமாலையை, பணிநீக்கம் செய்து, ஈரோடு எஸ்.பி., ஜவகர் உத்தரவிட்டார்.