/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நம்பியூர் குமுதா மெட்ரிக் 100 சதவீத தேர்ச்சி
/
நம்பியூர் குமுதா மெட்ரிக் 100 சதவீத தேர்ச்சி
ADDED : மே 08, 2024 02:33 AM
நம்பியூர்,:நம்பியூர் குமுதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் ௨ பொதுத்தேர்வு எழுதிய, அனைத்து மாணவர்களுமே முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர். பள்ளி மாணவர் நவீன், 590 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம், பள்ளியிலும் முதலிடம் பெற்றார். தமிழில்-98, ஆங்கிலம்- 93, கணிதம்-100, இயற்பியல்-99, வேதியியல்-100, உயிரியல்-100 மதிப்பெண்கள் பெற்றார்.
கணினி அறிவியல், வணிகவியலில் தலா ஐந்து பேர், கணிதத்தில் இருவர், இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் கணக்கு பதிவியல் தலா ஒருவர், 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர். தேர்வெழுதிய, 91 மாணவர்களில், 15 பேர், 550 மதிப்பெண்களுக்கு மேலும், 40 பேர், 500 மதிப்பெண்களுக்கு மேலும் பெற்றனர்.
மாவட்ட மற்றும் பள்ளி அளவில் சாதித்த மாணவர்களை, பள்ளி தாளாளர் ஜனகரத்தினம் பாராட்டி பரிசு வழங்கினார்.துணைத் தாளாளர் சுகந்தி ஜனகரத்தினம், பள்ளி செயலாளர் டாக்டர் அரவிந்தன், இணை செயலாளர் டாக்ட. மாலினி அரவிந்தன், பள்ளி முதல்வர் மஞ்சுளா, துணை முதல்வர் வசந்தி, விளையாட்டு இயக்குனர் பாலபிரபு மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.

