/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நந்தா பார்மஸி கல்லுாரி தேசிய அளவில் சாதனை
/
நந்தா பார்மஸி கல்லுாரி தேசிய அளவில் சாதனை
ADDED : ஆக 17, 2024 04:24 AM
ஈரோடு: மத்திய கல்வி அமைச்சகத்தின், சிறந்த தேசிய கல்வி நிறுவனங்களின், நடப்பாண்டு தரவரிசை பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இதில் சிறந்த செயல்பாடுகளின் அடிப்படையில், ஈரோடு நந்தா பார்மஸி கல்லுாரி ஐந்தாவது முறையாக தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
தேசிய அளவில், 65-வது இடத்தையும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை கீழ் இயங்கிவரும் மருந்தியல் கல்லுாரிகளில் இரண்டாவது இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளதாக, கல்லுாரி நிர்வாகிகள் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.
இந்த சாதனை புரிவதற்கு உறுதுணையாக செயல்புரிந்த முதல்வர் சிவக்குமார், ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு, ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகன், செயலர் நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் திருமூர்த்தி, முதன்மை கல்வி அதிகாரி ஆறுமுகம், முதன்மை நிர்வாக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.