/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சொந்த தொகுதியில் பணியாற்றும் அலுவலர் ஓட்டளிக்க புது சலுகை
/
சொந்த தொகுதியில் பணியாற்றும் அலுவலர் ஓட்டளிக்க புது சலுகை
சொந்த தொகுதியில் பணியாற்றும் அலுவலர் ஓட்டளிக்க புது சலுகை
சொந்த தொகுதியில் பணியாற்றும் அலுவலர் ஓட்டளிக்க புது சலுகை
ADDED : ஏப் 07, 2024 03:50 AM
ஈரோடு: லோக்சபா தேர்தலில் பணியாற்றும் ஓட்டுசாவடி அலுவலர்கள், தங்களது ஓட்டை தபால் ஓட்டு மூலமாக பதிவு செய்து வருகின்றனர். ஆனால், சொந்த தொகுதியில் பணியாற்றும் அலுவலர்கள், தங்களது ஓட்டை தேர்தல் நாளில் செலுத்தும் வசதியை தேர்தல் கமிஷன் வழங்கி உள்ளது.
இதுகுறித்து ஈரோடு தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:- சொந்த லோக்சபா தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஓட்டுச்சாவடி அலுவலர்கள், தாங்கள் பணியாற்றும் ஓட்டுச்சாவடி மையத்திலேயே இயந்திரத்தில் ஓட்டை பதிவு செய்யலாம்.
உதாரணமாக, ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் ஓட்டு வைத்திருக்கும் அரசு ஊழியர், ஈரோடு மேற்கு சட்டசபை தொகுதி ஓட்டுச்சாவடி மையத்தில் பணிக்கு நியமிக்கப்பட்டால், அதே ஓட்டுச்சாவடி மையத்தில் தனது ஓட்டை பதிவு செய்ய முடியும். இதற்காக தேர்தல் பணி சான்றிதழ் வழங்கப்படும். இதை பயன்படுத்தி ஓட்டை பதிவு செய்யலாம். இவ்வாறு கூறினர்.
தபால் ஓட்டு போட வசதி
தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு தபாலில் ஓட்டளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. பயிற்சி நடக்கும் இடத்திலேயே தபால் ஓட்டுப்பதிவுக்கு சிறப்பு முகாம் நடக்கிறது. இரண்டாம் கட்ட மூன்றாம் பட்ட பயிற்சியின்போதே அனைவரும் முடிந்த வரை தபால் ஓட்டை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

